கேரள மாநிலம் கொச்சி அருகேயுள்ள வெண்ணிலையில் பிரசாந்த் (40)-ரஷீதா (35) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் ரஷீதாவின் தாய் கிரிஜா (55). இவர்களில் கணவன் பிரசாந்த் அப்பகுதியில் மரம் அறுக்கும் ஆலை நடத்தி வந்தார். இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு கணவன்-மனைவி இருவரும் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்தநிலையில் இன்று தந்தை மற்றும் பாட்டி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து பிரசாந்த மகன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து பிரசாந்த மகன் இச்செய்தியை சொல்வதற்காக கண்ணீருடன் தாய் ரஷீதா இருந்த அறைக்கு ஓடிவந்துள்ளார்.
அப்போது அங்கு சிறுவனுக்கு பேரதிர்ச்சியாக தாயும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் காவல்துறையினர் உயிரிழந்த 3 பேரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு உயிரிழந்த பிசாந்தின் வீட்டில் அவர்கள் எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் 1 கோடி அளவில் இருந்த கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று எழுதப்பட்டு இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.