Categories
தேசிய செய்திகள்

ஒன்றுடன் ஒன்று மோதிய ரோப் கார்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. 48 பேரின் நிலைமை என்ன?….. பரபரப்பு….!!!!!!

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்திலுள்ள பாபாபைத்யநாத் கோவிலுக்கு அருகே திரிகுட்மலையில் நேற்று ரோப்கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. அதாவது சில தொழில்நுட்பம் கோளாறு காரணமாக இச்சம்பவம் நேர்ந்ததாக தெரிகிறது. இதன் விளைவாக கேபிள் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டது. இந்த விபத்தில் 1 பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அத்துடன் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையில் சம்பவத்தைத் தொடர்ந்து கேபிள் காரிலிருந்து குதிக்க முயற்சி செய்த ஒரு தம்பதியினர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதனிடையில் நேற்று 11 பேர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 48 பேர் சிக்கியுள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து ரோப்வே மேலாளர் மற்றும் பிற ஊழியர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த விபத்து நிகழ்ந்த திரிகுட் மலையில் இந்திய விமானப்படை  மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படை  வாயிலாக மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் இந்திய ராணுவம் மற்றும் இந்தோ திபெத் எல்லை காவல்துறையினர் என பல தரப்பினரும், அவர்களுடன் சேர்ந்து உள்ளூர் கிராம மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரோப் காரில் சிக்கி இருப்பவர்களை மீட்கும்  பணிகளில் 2 எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள்  ஈடுபட்டுள்ளன என்று இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |