ரஷ்யா KA-52 ரக ஹெலிகாப்டர் மூலம் உக்ரைன் கவச வாகனங்கள் மீது குண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உக்ரைன் ரஷ்ய நாடுகளுக்கு இடையிலான போர் தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்நிலையில் உக்ரேன் ராணுவத்தின் கவச வாகனங்கள் மீது ரஷ்ய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலின் காணொளியை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் மிகவும் தாழ்வாக பறந்த ரஷ்யாவின் KA-52 ரக போர் ஹெலிகாப்டர்கள் வரிசையாக அணிவகுத்து சென்றுள்ளது.
இதனை அடுத்து இதிலிருந்த ரஷ்ய இராணுவ வீரர்கள் உக்ரைன் ராணுவ கவச வாகனங்கள் மீதும் விமான தடுப்பு அமைப்புகள் மீதும் ஏவுகணை வீசியும் கனரக எந்திரத் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தி இருந்தனர். மேலும் உக்ரைன் தரப்பில் ஏராளமான ஆயுதங்களும் ராணுவ உபகரணங்களும் அளிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.