கள்ளக்காதலுக்காக வாலிபர் இறந்ததாக நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உவரியில் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வாலிபர் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் கடற்கரையில் சென்று பார்த்துள்ளனர். அப்போது வாலிபரின் உடைகள், காலணிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் கடற்கரையில் இருந்தது. இதனால் வாலிபர் கடலில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என பெற்றோர் நினைத்துள்ளனர். இதற்கிடையே மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவரும் வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். இந்நிலையில் வாலிபரின் வீட்டிற்கு முன்பாக நின்ற கார் சில நாட்களுக்கு முன்பாக திருடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உபரி காவல்நிலையத்தில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் இருக்கும் ஒரு வீட்டின் முன்பாக திருடுபோன கார் நின்றுள்ளது. அந்த வீட்டில் இளம்பெண் மற்றும் வாலிபரும் இணைந்து ஒன்றாக வசித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் வாலிபர் திருமணமான இளம் பெண்ணுடன் வாழ்வதற்காக இறந்ததுபோல் நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் வாலிபரையும், இளம் பெண்ணையும்உவரிக்கு அழைத்து வந்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.