குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு வருகிற 14-ஆம் தேதி குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
இந்நிலையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் குருபகவானுக்கு வருகின்ற 14-ஆம் தேதி காலை ஒன்பது முப்பது மணி அளவில் கணபதி ஹோமம், உருவம் அத்துடன் குரு பெயர்ச்சி தொடங்குகிறது. இதனையடுத்து மதியம் பன்னிரண்டு முப்பது மணிக்கு பூர்ணாகுதி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதனையடுத்து பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.