Categories
மாநில செய்திகள்

தமிழ்வழி சான்று பெற லஞ்சம்….!! தலைமையாசிரியர் செஞ்ச வேலையைப் பாருங்க…!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. திமுக அரசு பொறுப்பேற்றது முதலே டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தமிழ்மொழியில் பயின்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பலரும் தமிழ் வழியில் படித்த சான்றிதழை அவர்கள் படித்த பள்ளிகளில் சென்று வாங்கும் பணிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா பாலப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் தங்கள் தமிழ் வழியில் படித்த சான்றிதழை வாங்குவதற்காக விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பத்தை பெறுவதற்கு பள்ளியின் தலைவர் ஆசிரியர் பெரியசாமி ஒவ்வொரு மாணவரிடம் ரூபாய் 50 லஞ்சமாகக் கேட்டதாக கூறப்படுகிறது. அதோடு தமிழ்வழி சான்றிதழ் கேட்டு வரும் மாணவர்களை தரக்குறைவாக பேசியதாகவும் மாணவர்கள் பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

Categories

Tech |