அனகோண்டா படத்தில் நடித்த நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸும் (வயது 52), பிரபல ஹாலிவுட் நடிகரான பென் அப்லெக்கும் (வயது 49) சுமார் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைய உள்ளனர். கடந்த 2002ஆம் ஆண்டில் அப்லெக்கிற்கும், ஜெனிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இரண்டு வருடங்களிலேயே இருவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக பிரிந்துவிட்டனர்.
இதையடுத்து அப்லெக் கார்னர் என்பவரையும், ஜெனிபர் லோபஸ் ஆண்டனி என்பவரையும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் தங்களது ஜோடியை விட்டு தனியாக பிரிந்தனர். பின்னர் கடந்த ஓராண்டு காலமாக பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஜெனிபர், அப்லெக் இருவரும் ஒன்றாக பங்கேற்று வந்ததையடுத்து மீண்டும் தாங்கள் இணைய உள்ளதாக ஜெனிபர் லோபஸ் அறிவித்துள்ளார்.