Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்…. பிரதமர் மோடி அமோக வெற்றி பெறுவார்…. எச்.ராஜா கருத்து….!!

இனி வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதமர் மோடி அமோக வெற்றி பெறுவார் என கூறியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதிக்கு பா.ஜ.க கட்சியின் செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா வருகை புரிந்தார். அப்போது பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் மக்கள் மத்தியில் பா.ஜ.க கட்சிக்கு  அமோக ஆதரவு இருக்கிறது எனவும், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் எனவும் கூறினார். அதன்பிறகு மத்திய மந்திரி அமித்ஷா  ஆங்கிலம் பயன்படுத்தும் இடத்தில் இந்தி மொழியைப் பயன்படுத்தலாம் என கூறினார்.

ஆனால் தமிழ்மொழி பயன்படுத்தும் இடத்தில் இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என அவர் கூறவில்லை. இதற்காக தி.மு.க கட்சியினர் போராட்டம் நடத்தினால் என்னுடைய முதல் உண்ணாவிரதப் போராட்டம் வேளச்சேரியில் உள்ள பள்ளியில் இருந்து தொடங்கும். இதனையடுத்து தி.மு.க குடும்பத்தினர் சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தி வருகின்றனர். அங்கு தமிழ் மொழியைத் தவிர அனைத்து பாடங்களையும் கற்பித்து வருகின்றனர் என்பது ஊரறிந்த உண்மை ‌ ஆகும். இவ்வாறாக எச்.ராஜா நிருபர்களிடம் கூறினார்.

Categories

Tech |