Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆரோக்கியம் பல நிறைந்த ருசியான கருவேப்பிலை குழம்பு…

கறிவேப்பிலையில் எண்ணில் அடங்கா நன்மைகள் இருந்த நிலையில் கருவேப்பிலை குழம்பு செய்வது பற்றி பார்க்கலாம்.

கருவேப்பிலையின் நன்மைகள்

செரிமான சக்தியை அதிகரிக்கும்

புற்றுநோய் வராமல் தடுக்கும்

தலை முடியை ஆரோக்கியமாக வளரச் செய்யும்

இரத்த சோகையில் இருந்து விடிவு கொடுக்கும்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்

இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும்

கருவேப்பிலை குழம்பு செய்வது பற்றி 

தேவையான பொருட்கள்:

கருவேப்பிலை     –    இரண்டு கைப்பிடி அளவு

துவரம்பருப்பு        –    இரண்டு டீஸ்பூன்

சீரகம்                         –     2 டீஸ்பூன்

கடலை பருப்பு      –     2 டீஸ்பூன்

உளுந்தம் பருப்பு  –     2 டீஸ்பூன்

மிளகாய் வத்தல்  –     4

கடுகு                          –      1 டீஸ்பூன்

நல்லெண்ணெய்  –  தேவையான அளவு

உப்பு                           –   தேவையான அளவு

 

செய்முறை:

முதலில் சீரகம், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, மிளகாய் வத்தல், கடலைப்பருப்பு அனைத்தையும் எண்னையில் வறுத்து கொள்ளவும்.

கருவேப்பிலையை தனியாக வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.

பின்னர் இரண்டையும் புளி சேர்த்து  மிக்ஸியில் அரைத்து தேவையான அளவு உப்பு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

மீதமிருக்கும் எண்ணையில்  கடுகு தாளித்துஅரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து கொதித்ததும் இராக்கிவிடவும்.

சுவையான மற்றும் ஆரோக்யம் நிறைந்த கருவேப்பிலை குழம்பு தயார்.

Categories

Tech |