நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படம் மூன்று நாட்களில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று இரவு நெல்சன் திலீப் குமார் மற்றும் விஜய் இடையேயான நேருக்கு நேர் பேட்டி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த பேட்டியின்போது நெல்சன் திலீப்குமார் தளபதி விஜயிடம் ஏராளமான கேள்விகளை கேட்டார்.
அவ்வகையில் பல கோடி மக்களின் கேள்வி என்று குறிப்பிட்டு “இளைய தளபதியாக இருந்த நீங்கள் தற்போது தளபதியாக மாறி இருக்கிறீர்கள். இந்த தளபதி தலைவராக மாறுவாரா” என கேட்டுள்ளார். அதற்கு “சாதாரண விஜயாக இருந்த என்னை இளைய தளபதியாக மாற்றி அதிலிருந்து தளபதியாக கொண்டு வந்தது ரசிகர்கள்தான். இனிவரும் காலத்திலும் ரசிகர்களும் அப்போதைய சூழ்நிலையும் தான் எந்த முடிவையும் தீர்மானிக்கும். பீஸ்ட் விஜயாக இருக்க வேண்டுமா அல்லது பூவே உனக்காக விஜயாக இருக்க வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என அவர் பதிலளித்துள்ளார்.