வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இதற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திக் பேருந்து நிலையம் அருகாமையில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.