திருப்பூர் மாநகரில் கடைகள், பின்னலாடை நிறுவனங்கள் என எங்கும் நெகிழிப் பைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் கழிவாக மாறும் நெகிழிப் பொருட்களை ஆங்காங்கே வீசி செல்வதால் நகரமே நெகிழியால் சூழப்பட்டது போல் காட்சி அளித்து வருகிறது. மேலும் சில பின்னலாடை நிறுவனங்களிலிருந்து நெகிழிக் குப்பைகள் மற்றும் இதர கழிவுகளை நொய்யல் ஆற்று கரையோரம் மக்கள் நடமாட்டம் இல்லாத சாலை ஓரங்களிலும் கொட்டி செல்கிறார்கள்.
அதே நேரத்தில் பொது மக்கள் அதிகம் புழங்கும் மளிகை, காய்கறி உணவகங்களில் அதிக அளவு மக்காத தன்மை கொண்ட நெகிழிப் பைகள் அதிகம் பயன்பாட்டில் இருக்கிறது. இதனையடுத்து நெகிழி பயன்பாட்டை குறைக்கவும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பையை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கும் என திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உத்தரவிட்டிருக்கிறார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் உணவு பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கால் ஆன தர்மாகோல் தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பூசப்பட்ட காய்கறிகள் உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டு சட்டம் எழுதப்பட்டிருக்கிறது.
இந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழை இலை, அலுமினியத்தாள், காகிதச் சுருள், தாமரை இலை போன்ற 12 வகையான பொருட்களை பயன்படுத்தும் அறிவுறுத்தப்படுகிறது. திருப்பூர் மாநகர் பரப்பளவு அதிகரித்து அழகுபடுத்தவும், பசுமை சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மாநகராட்சியின் சார்பில் மரக்கன்றுகள் நடுதல் தீவிர தூய்மைப் பணியில் நீண்ட நாள் கழிவுகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளை மேற் கொள்ளப்படுகின்றன. மேலும் அரசின் அழுத்தங்களையும் மீறி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் உபயோகப்படுத்தும் அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்து மாநகராட்சி சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனால் வணிக நிறுவனங்கள் சிறு அங்காடிகள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தல் தவிர்ப்பு மற்றும் பயன்படுத்துவதை தவிர்க்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க திருப்பூர் மாநகரத்தின் சுற்றுச்சூழலை மாசற்ற உருவாக்க பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மேயர் தினேஷ்குமார் கூறியுள்ளார்