பிரெஞ்சு அதிபர் பதவிக்காக யாரை தேர்வு செய்வது என்பதற்காக ஏப்ரல் 24ஆம் நாள் வாக்குப்பதிவு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அதிபர் பதவிக்கான தேர்தலில் இப்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரான், வலதுசாரிக் கட்சியின் மரின் லீ பென் போன்ற 12 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு பிரான்சிலும் உலகின் பிற பகுதிகளில் உள்ள அதன் ஆட்சிப்பகுதிகளிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது. எந்த வேட்பாளரும் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளை பெறாவிட்டால் முதல் இரண்டு இடங்களில் உள்ள வேட்பாளர்கள் இடையே ஏப்ரல் 24 அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும்.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் கருத்துக்கணிப்பில் மேக்ரான் எளிதில் வெற்றி பெறுவார் என கூறப்பட்டிருந்தது. அண்மையில் வெளியான கருத்துக் கணிப்பில் மரபின் லீ மென்னும், மேக்ரானுக்கு அடுத்த இடத்தை பிடிப்பார் என தெரிய வந்திருப்பதால் அவர்களில் யாரை தேர்வு செய்வது என்பதற்காக ஏப்ரல் 24ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என தெரிகிறது.