கோடை சீசனை முன்னிட்டு ஹோட்டல்களில் வாடகை கட்டணம் அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியதால் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணமாக உள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றில் தங்கியிருந்து சுற்றுலா தளங்களை பார்த்து ரசிப்பார்கள். இந்நிலையில் விடுதிகளில் வாடகை கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக உயர்ந்துள்ளது.
அதாவது ஊட்டியில் 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் இருக்கிறது. இப்பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் ஒரு நாள் அறை கட்டணம் 2,700 ரூபாயாகவும், சிறப்பு வசதிகள் கொண்ட அறைக்கு ஒருநாள் கட்டணம் 3,000 ரூபாயாகவும், காட்டேஜ் கட்டணம் 4,100 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து விடுமுறை தினங்களில் விடுதி கட்டணம் ரூபாய் 3,000 முதல் 7,000 வரை வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாக நடுத்தர சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.