திருமணமான 25-வது நாளில் புதுப்பெண் கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ராயகிரியில் அருணா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும் கடந்த மாதம் 13-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு அருணாதேவி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் திடீரென காணாமல் போய்விட்டார். இதனை அடுத்து அருணாதேவியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதுகுறித்து அருணா தேவியின் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருணாதேவி வீட்டிலிருந்து செல்வதற்கு முன்னால் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் நமது வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை. வாழ்க்கை கசக்கிறது. ஆகவே நீங்கள் என்னை தேட வேண்டாம். நான் ஓடுவதற்கு யாரும் காரணமில்லை என எழுதியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 25 நாளில் புதுப்பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.