Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“அம்மா… எனக்கு படிப்பு வரவில்லை” மாணவன் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள வாடியூர் வடக்குத் தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இன்பரசன் என்ற மகனும், உதயஸ்ரீ என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் இன்பரசன் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்பரசன் தனது தாயிடம் படிப்பதற்கு மிகவும் கஷ்டப்படுவதாக கூறியுள்ளான்.

இதனையடுத்து ஒழுங்காக படித்தால் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்கலாம் ஆனால் எனக்கு படிப்பு வரவில்லை என சிறுவன் கூறியதாக தெரிகிறது. அதற்கு நீ ஒன்றும் கவலைப்படாமல் படி என ராமலட்சுமி ஆறுதல் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த இன்பரசன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமலட்சுமி உடனடியாக தனது மகனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே இன்பரசன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |