விளையாட சென்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள தேங்கல்பாளையம் பகுதியில் வசித்து வரும் சண்முகம் என்பவருக்கு விஷ்வா(12) என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளியை முடித்து வந்த விஷ்வா விளையாடுவதற்காக வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து வெகு நேரமாகியும் சிறுவன் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.
இதனைதொடர்ந்து மறுநாள் கலையில் அதேபகுதியில் உள்ள கிணற்றில் சிறுவன் விஷ்வா பிணமாக மிதப்பதாக ராசிபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் கிணற்றில் கிடந்த விஷ்வாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகனின் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.