பாகிஸ்தானில் நாடாளுமன்ற பதவியில் இருந்து விலகி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர்கள்.
பாகிஸ்தானின் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்திற்கான வாக்கெடுப்பை பிரதமர் இம்ரான் கான் தடுக்க நாடாளுமன்றத்தை கலைக்க அதிபரை கேட்டுக்கொண்டார். இதனால் அதிபர் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இதற்கிடையில் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு பதிவானது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அறிவிக்காததால் நாடாளுமன்றத்தில் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அரசு அதிரடி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அசாத் குவாய்சர் மற்றும் துணை சபாநாயகர் காசிம் சுரி இருவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவித்து தங்கள் பாதையிலிருந்து விலகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் துணை சபாநாயகர் இருவரும் பதவியிலிருந்து விலகிய போதும் தற்காலிக சபாநாயகர் தலைமையில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.