பொதுமக்கள் கால்நடைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை கால்நடை மருத்துவமனைக்கு சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து செல்கின்றனர். இங்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மருத்துவமனை திறக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை பொதுமக்கள் வாகனங்களில் ஏற்றி கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் 11:30 மணி வரை மருத்துவமனை திறக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் தங்களது கால்நடைகளுடன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மருத்துவர் வந்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு தங்களது கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்த பிறகு அங்கிருந்து சென்றனர்.