உக்ரைன் மீது ரஷ்யா 45-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய படைகளின் பிடியில் கடந்த ஒரு மாத காலமாக சிக்கியிருந்த 300 அப்பாவி மக்களில், 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களுடைய சடலங்கள் அப்புறப்படுத்தப்படாமல் இருட்டு அறை ஒன்றில் கிடப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பள்ளி ஒன்றின் அடித்தளத்தில் 700 சதுர அடி கொண்ட அறையில் சிக்கிக்கொண்ட 300 அப்பாவி மக்களில் சிலர் பசி அல்லது மூச்சுத்திணறலாலும், சில முதியவர்கள் சோர்வாலும் இறந்துள்ளனர்.
அதோடு மட்டுமில்லாமல் பச்சிளம் குழந்தைகளும், 50 சிறார்களும் ஒரு மாத காலமாக அந்த இருட்டு அறையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ரஷ்ய படைகள் திடீரென கிராமத்திற்குள் புகுந்து வலுக்கட்டாயமாக அங்கிருந்த மக்களை இழுத்துச்சென்று அந்த இருட்டு அறையில் அடைத்து வைத்திருந்ததாக முதியவர் ஒருவர் கூறியுள்ளார். ரஷ்ய படைகளால் சிலர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பசியால் உயிரிழந்தவர்களின் பெயர்களை அங்குள்ள சுவற்றில் எழுதி வைத்துள்ளதாகவும் கிராம நிர்வாகி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.