அர்ஜென்டினாவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார் திடீரென பழுதானது. அதனால் அந்த கார் தண்டவாளத்தை நகர முடியாமல் போனதாக கூறப்படுகிறது. சில நொடிகளில் வந்த ரயில் கார் மீது மோதி சிறிது தூரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளது.
இந்த நிலையில் ரயில் ஓட்டுனரின் துரித நடவடிக்கையால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.மேலும் காரில் பயணித்த 3 குழந்தைகள், பெண் உள்பட ஒரே குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.