சென்னையை சேர்ந்த இளைஞர் சதீஸ் குளிர்பானம் சாப்பிட்டு நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரி சேர்ந்த இளைஞர் சதீஷ் இவர் கிழக்கு கடற்கரை சாலை அருகே நண்பர்களுடன் வெகுநேரமாக இறகுபந்து விளையாடிவிட்டு அருகில் உள்ள கடையில் நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் குளிர்பானம் ஒன்றை அருந்தியுள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. குளிர்பானம் சாப்பிட்டதால் திடீரென நெஞ்சுவலி மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதித்தனர்.
ஆனால் பரிசோதனை செய்து அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவிலேயே அவரின் இறப்பிற்கான காரணத்தைக் கூற முடியும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.