ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி நேற்று குப்வாரா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
அப்போது, அங்கிருந்த செய்தியாளர்களை மெகபூபா சந்தித்து பேசிய அவர், காஷ்மீர் பொருளாதாரத்தை அழிக்க பாஜக முயற்சிப்பதாக மெகபூபா முப்தி குறை கூறியுள்ளார். இது தொடர்பாக மெகபூபா பேசும்போதும் கடந்த 3 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் பாஜக அசாதாரண சூழ்நிலை உருவாகியிருக்கிறது. பொதுமக்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
தினம் தினம் சோதனைகள் நடைபெறுகிறது. அரசு ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் வெளி மாநிலங்களை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் காஷ்மீரில் பணியமர்த்த படுகின்றார்கள். மேலும் ஜம்மு காஷ்மீரில் பொருளாதாரத்தை அழிக்க முயற்சி செய்கிறது. நமது அடையாளங்கள் அழிக்கப்படுகிறது இதனை பிரதமர் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார் எனவும் அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை எனவும் கூறியுள்ளார்.