Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

300 லிட்டர் கள்ளச்சாராயம்…. 2250 கிலோ வெல்லம் கடத்தல்….. 2 இளைஞர்கள் கைது….!!

கள்ளக்குறிச்சி அருகே மது விலக்கு சோதனை பிரிவினர் நடத்திய வாகன சோதனையில் 300 லிட்டர் கள்ளசாராயம் கடத்திய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூலகடு கிராமத்தில் உள்ள மதுவிலக்கு சோதனைச் சாவடியில் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் ரேவதி உள்ளிட்ட குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலையிலிருந்து சேரபட்டு நோக்கி வந்த மினி வேனை சோதனை செய்தனர். 

அதில் இருந்த 300 லிட்டர் சாராயம் 2250 கிலோ வெல்லம் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக இதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட அஜித் சுரேஷ் ஆகிய இரண்டு இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Categories

Tech |