பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், அண்ணாசிலை அருகில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக பெட்ரோல், டீசல், விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராஜகோபால் தலைமை தாங்கிய இந்த ஆர்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், ஆம் ஆத்மி கட்சியினர் உட்பட பலர் பங்கேற்றனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டர் மற்றும் பைக்கிற்கு மாலை அணிவித்து ஒப்பாரி பாடி மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினார்கள்.