Categories
உலக செய்திகள்

போருக்கு தயாராகிறதா பாகிஸ்தான்….!! திடீரென நடத்திய ஏவுகணை சோதனை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அரசியல் நிலைபாடு அற்ற நிலையில் இன்று பாகிஸ்தான் ஏவுகணை பரிசோதனையை நடத்தி உள்ளது.

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற உள்ள நிலையில் அந்நாடு தனது ஏவுகணை சோதனையை இன்று நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் ஆயுத படையின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில், “நாட்டில் உள்ள ஆயுத அமைப்பின் பல்வேறு வடிவம் மற்றும் தொழில்நுட்ப அளவீடுகளை மறுமதிப்பீடு செய்வதற்காக தான் ஷாகீன்-3 ஏவுகணை பரிசோதனைகள் செய்தோம். அது வெற்றியடைந்து உள்ளது” என்று தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதமும், இதனை போலவே ஏவுகணை பரிசோதனையை பாகிஸ்தான் நடத்தியிருந்தது. இந்த ஏவுகணை 2,750 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க கூடியது. மேலும் இந்த ஏவுகணை பரிசோதனையானது 2015ம் ஆண்டு   முதன்முறையாக மார்ச் மாதம் நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திடஎரிபொருளை கொண்டு செலுத்தப்படும் இந்த ஏவுகணை பி.எஸ்.ஏ.சி. எனப்படும் சாதனத்துடன் செயல்பட கூடியது.

இதற்கிடையில் இன்று இரவு 8 மணியளவில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடத்தப்பட உள்ள நிலையில் அரசியல் நிலைபாடு அற்ற சூழலில் அந்நாடு இந்த ஏவுகணை பரிசோதனையை நடத்தி உள்ளது.

Categories

Tech |