மேஷ ராசி அன்பர்கள்,
இன்று பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவிகளை மேற்கொள்வார்கள்.
நன்மை கிட்டும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று பணவரவு தாராளமாக இருக்கும். வாகனயோகம் இருக்கும். பெரியவர்களின் உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் பிறக்கும். எதிலும் தயக்கமோ பயமோ ஏற்படாது. இன்று தொழில் வியாபாரம் ஓரளவு நன்றாகத்தான் இருக்கும். வாக்குவன்மையால் லாபமும் இருக்கும் பழைய பாக்கிகளும் வசூலாகும்.
அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். இன்று வாகனத்தில் செல்லும்போது கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். கடன்கள் யாருக்கும் வாங்கிக் கொடுக்காதீர்கள். அதில் மட்டும் நீங்கள் கவனம் கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும். கல்வியில் எந்தவித பிரச்சனையும் இல்லை, சக மாணவர்களின் முழு ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் . அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப நல்ல படியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும்இளம்மஞ்சள்
ரிஷப ராசி அன்பர்கள்,
இன்று கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். சொந்தபந்தங்கள் பிரச்சனைகள் வரக்கூடும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள் வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் கொஞ்சம் தாமதமும் சிக்கலும் இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் ஏதும் வேண்டாம். தடைகளை தாண்டித்தான் என்று முன்னேற வேண்டியிருக்கும்
கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் கொள்வீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனசுக்கு இதம் கொடுக்கும். பெண்களுக்கு மனதில் வீண் குழப்பம் கொஞ்சம் ஏற்படும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும்.
உத்யோகத்தில் உயர்வு பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனையே ஓரளவு கொடுக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று கொடுக்கல், வாங்கல்களில் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம், நீங்களும் கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடுமையாக உழைத்து படியுங்கள். விளையாட்டை தயவு செய்து எரங்கட்டி விடுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க க்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியங்களும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை
மிதுனம் ராசி அன்பர்கள்,
இன்று எதிர்பாராத பணவரவு ஏற்படும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனையாகும் உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லிக் கொடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாளாகவே இருக்கும். மனதில் தைரியம் பிறக்கும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.
எதிலும் முன்னேற்றம் காணப்படும். உங்கள் இஸ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும், முடிவு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். மன கஷடம் குறையும். ஆனால் செலவு மட்டும் கொஞ்சம் கூடும். பார்த்து கொள்ளுங்கள். இன்று உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் போன்றவை ஏற்படும்.
இன்று மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும். மேற்கல்விக்கான முயற்சியில் வெற்றி இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு
கடக ராசி அன்பர்கள்,
இன்று தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் அனைத்துமே பூர்த்தியாகும். கடன் பிரச்னை கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் மட்டும் இருக்கட்டும்.
ஒருமுறைக்கு, இருமுறை தொழில் சார்ந்த வகையில் முடிவு எடுப்பதற்கு முன் யோசியுங்கள். பெரியோரிடம் ஆலோசனை கேளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே இன்று அன்பு இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. இன்றைக்கு மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள், உழைத்து பாடங்களை படியுங்கள், படித்த பாடத்தை எழுதி பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள்
சிம்ம ராசி அன்பர்கள்,
இன்று தர்மசங்கடமான சூழ்நிலையை நீங்கள் சந்திக்க கூடும். அவ்வப்போது சின்னச் சின்ன பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் ஏதும் எடுக்க வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவு வந்து செல்லும். விட்டு கொடுக்க வேண்டிய நாளாக இருக்கும். வந்து செல்லும் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள் இருக்கும்.
இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும். இனிமையான பேச்சுக்கள் மூலம் எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள். புத்திரர்கள் வழியில் மன வருத்தம் கொஞ்சம் ஏற்படலாம். மற்றொருவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக இருங்கள். செய்தொழில் லாபம் பன்மடங்கு உயரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உடலில் வசீகரத் தன்மை கூடும்.
இன்று மாணவ கண்மணிகளுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். இன்று மேற்கல்வியில் வெற்றி வாய்க்குள் ஏற்பட கூடும் இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை
கன்னி ராசி அன்பர்கள்,
இன்று குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும் . வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில்அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும்.
தைரியம் கூடும் நாளாக இன்று இருக்கும். இன்று மன நிம்மதியும், சந்தோஷமும் கூடும். ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கள காரியங்கள் சிறப்பாகவே நடைபெறும். பிள்ளைகளுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கும், கடின உழைப்பு, முயற்சிகளுக்கு வெற்றியை கொடுக்கும்.
அதிகமாக இன்று யோசனை செய்வீர்கள். நீண்ட நாட்களாக போட்டிருந்த திட்டம் முழுவதுமாக செயல்பட வாய்ப்பு இருக்கிறது.இன்று மாணவ கண்மணிகளுக்கு அனைத்து விஷியத்திலும் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். மேற் கல்விக்கான முயற்சிகளிலும் வெற்றி வாய்ப்புக்கள் கூடும். சக மாணவரிடம் அன்பாகவே நடந்துகொள்வீர்கள்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது பச்சை நிறம் ஆடையை அனைத்து கொண்டு செல்லுங்கள் அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை
துலாம் ராசி அன்பர்கள்,
துலாம் ராசி அன்பர்களே இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தோற்றப்பொலிவு கூடும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இன்று மகிழ்ச்சியான நாளாகவே இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் கொஞ்சம் ஏற்படும். தொழில் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு கொஞ்சம் அதிகமாகும்.
இன்றைய நாள் எல்லா வகையிலும் உங்களுக்கு சந்தோசமும் மன நிம்மதியும் ஏற்படும். இன்று காதலர்களுக்கு பொன்னான நாளாக அமையும். காதலில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்கள் படிக்க வேண்டி இருக்கும். சக மாணவர்களிடம் கோபப்படாமல் பேசுங்கள், ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு பாடங்களை படிப்பது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிற உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்
விருச்சிக ராசி அன்பர்கள்,
இன்று நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனவரவு உங்களுக்கு வந்து சேரும். ஆனால் இன்று நீங்கள் செய்யவேண்டியது கோபத்தை மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். கோபத்தால் இழப்புகள் கொஞ்சம் ஏற்படும். குறைத்து மதிப்பிடாதீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க தாமதம் ஏற்படும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். இன்று எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபடுங்கள், நீங்கள் அவசரமாக எதையும் செய்யக்கூடாது.
இன்று ஓரளவு காரியங்கள் வெற்றியை கொடுக்கும். பணவரவு வந்து சேரும், உடல் சோர்வு கொஞ்சம் ஏற்படலாம். இன்று வீன் கவலை வீண் வாக்குவாதங்கள் போன்றவை கூட ஏற்படும். முயற்சிகளில் வெற்றி ஏற்படும், எதிர்ப்புகள் ஓரளவு விலகி தான் செல்லும் இருந்தாலும் கவனமாக செயல்படுங்கள். இன்று மாணவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் பாடங்களை மட்டும் கூர்ந்து கவனித்துப் படியுங்கள் அது போதும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளஞ்சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிஷ்ட திசை: தெற்கு
அதிஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்டநிறம்: இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறம்
தனுசு ராசி அன்பர்கள்,
இன்று குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் இன்று உங்களுக்கு உதவிகளைச் செய்வார்கள். எதிராக பேசியவர்கள் வழிந்து வருவார்கள் வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள் இனிமையான நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும். இனிமையான பேச்சு மூலம் எல்லாவற்றையும் நல்லபடியாக செய்து முடிப்பீர்கள்.
புத்திர வழியில் மனவருத்தம் கொஞ்சம் ஏற்படலாம், மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் கொஞ்சம் ஏற்படலாம் கவனமாக இருங்கள்.இன்று எந்த ஒரு விஷயத்தையும் யோசனை செய்து செய்யுங்கள். முடிந்தால் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள் தொழில் செய்பவர்களுக்கு ஓரளவு லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரைஎந்த பிரச்சனையும் இல்லை சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணத்தின் போது பொருட்கள் மீது கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மாணவ செல்வங்கள் எதிர்பாராத வகையில் முன்னேற்றங்கள் பெறக்கூடும்.. ஆசிரியர்களின் அன்பு கூடியவர்களாக மாறுவார்கள்
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் நீல நிறம்
மகரம் ராசி அன்பர்கள்,
இன்று அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். உங்களால் பயனடைந்தவர்கள் இன்று உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். இன்று உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திட்டங்கள் நிறைவேறும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் மூலம் கடின வேலையையும் எளிதாக செய்து முடிப்பார்கள். கஷ்டம் இல்லாத வாழ்க்கை ஏற்படும்.
வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் சேரும், விருந்தினர் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். இன்று மாணவ செல்வங்களுக்கு கல்வியில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஊதாநிற உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா மற்றும் மஞ்சள் நிறம்
கும்பம் ராசி அன்பர்கள்,
இன்று குடும்பத்தில் உங்கள் கை ஓங்கி இருக்கும் உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் நடந்துகொள்வார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும், கனவு நனவாகும் நாளாக இருக்கும். ஆன்மீக நாட்டம் செல்லும். வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்குவீர்கள்.
வழக்குகள் சாதகமான பலனையே கொடுக்கும். புத்திரர்கள் இடம் மிகவும் கவனமாக இருப்பது மட்டும் நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். இன்று கொஞ்சம் கடினமாகத்தான் உழைப்பீர்கள். இன்று எதிரிகளிடம் இருந்து விடுபடும் நாளாகவும் இருக்கும். இன்று மாணவக் கண்மணிகள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் காவி நிறம்
மீன ராசி அன்பர்கள்,
இன்று தவறு செய்பவர்களை தட்டிக் கேட்கக்கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்கக்கூடும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டக் கூடும். மகிழ்ச்சி கூடும் நாளாகவே இருக்கும். இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும், பணவரவு கூடும்.
பிள்ளைகளின் கல்வியில் வெற்றி ஏற்படும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டுக்களில் ஆர்வம் இன்று இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். கொடுக்கல் வாங்கல்கள் ரொம்ப சிறப்பாக நடக்கும். புறம் பேசியவர்கள் ஒதுங்கி விடுவார்கள். இன்று எடுத்த காரியத்தை நீங்கள் திறம்பட செய்து முடிப்பீர்கள். பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று உறவினர் வழியில் உதவிகள் பெறுவீர்கள். இன்றைய நாள் தெய்வீக நம்பிக்கை கூடும் நாளாக இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்த தடையும் இல்லை, சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமல்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் சிறப்பாக நடக்கும்.
அதிஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் காவி நிறம்