காவல் நிலையத்தில் பணியில் இருக்கும் போது லஞ்சம் வாங்கிய ஏட்டுக்கு 2 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிலுள்ள காவல்நிலையத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு கோவிந்தராஜ் என்பவர் பணியில் இருந்துள்ளார். அப்போது காவல் நிலையத்திற்கு ஒரு வழக்கிற்காக வந்த நாச்சியார்பட்டி பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம் கோவிந்தராஜ் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து சீனிவாசன் லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சீனிவாசனிமிருந்து கோவிந்தராஜ் பெற்று கொண்டுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கோவிந்தராஜை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
இது சம்பந்தமான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. இந்த வழக்கை நீதிபதி ஹாஜிரா கோவிந்தராஜனுக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதமும், 2 வருடங்கள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.