Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் நிறுத்தம்….. ஷாக் நியூஸ்….!!!!

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாகம் சார்பாக இலவச தரிசன டிக்கெட் வினியோகம் செய்யப்படுகிறது. அவ்வகையில் திருப்பதி பேருந்து நிலையம் எதிரே உள்ள ஸ்ரீனிவாசன் பக்தர்கள் ஓய்வறை, ரயில் நிலையம் பின்புறம் உள்ள கோவிந்தராஜர் சுவாமி சத்திரம் மற்றும் அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் வருகின்ற 12ஆம் தேதி சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் நேற்று மதியம் வரை மட்டுமே வழங்கப்பட்டது.அதன்பிறகு இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 12 ஆம் தேதி மதியத்திற்கு பிறகு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |