Categories
மாநில செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸார்…!!!!!!

காசிமேடு  பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதைப் பொருள் வைத்திருந்த ஜீவனந்தன் என்பவரிடம் 600 கிராம் கஞ்சா, 1 கிராம் மெத்தம்பெட்டமைன், 80 LSD ஸ்டாம்ப், 150 MDMA மாத்திரைகள் மற்றும் 15 கிராம் கோடை காளான்  போன்றவற்றை பறிமுதல் செய்து வண்ணார்பேட்டை துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படையினரை  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார்.

சென்னை பெருநகர காவல் வண்ணாரப்பேட்டை துணை ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை குழுவினருக்கு தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் தெரு போதைப் பழக்கம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ரகசிய தகவலின் பேரில் மார்ச் 23ஆம் தேதி மதியம் கும்மாளம்மன் கோவில் தெரு உள்ள ஒரு வீட்டை கண்காணித்த போது அங்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அதன்பேரில், காவல் குழுவினர் மேற்படி வீட்டில் சோதனை மேற்கொண்டு, வீட்டில் மறைத்து வைத்திருந்த 600 கிராம் கஞ்சா, 1 கிராம் மெத்தம்பெட்டமைன், 80 LSD ஸ்டாம்ப், 150 MDMA மாத்திரைகள் மற்றும் 15 கிராம் கோடை காளான் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, போதை பொருட்கள் வைத்திருந்த ஜீவந்தன் (26) என்பவரை கைது செய்து காசிமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

விசாரணையில் ஜீவந்தன் போதை பொருட்களை வெளிநாட்டிலிருந்து செல் போன் செயலி  மூலம் ஆர்டர் செய்து, இணைய வழி மூலம் பணபரிவர்த்தனை செய்து, கொரியர் மூலம் பெற்று, சென்னையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், வீட்டில் போதைப்பொருட்கள் வைத்திருந்த நபரை கைது செய்த வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படையினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Categories

Tech |