சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கக்கநல்லா சோதனைச் சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் மணிதுரை தலைமையிலான குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை மறித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 1 கிலோ இருந்தது. அதன்பிறகு காவல்துறையினர் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ரத்தின், சல்மான், சங்கர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்துள்ளனர்.