வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி செல்வபுரம் பகுதியில் பாலசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஜீப் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 6-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் குடித்து விட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அஜித்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக அஜித்குமாரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக நியூஹோப் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.