Categories
உலக செய்திகள்

கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவர்…. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இரங்கல்….!!!!

கனடாவின் தலைநகரான டொரண்டோவில் உள்ள கல்லூரி ஒன்றில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்ற மாணவர் மேலாண்மை துறை முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று சுரங்க ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த கார்த்திக் வாசுதேவை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த கார்த்திக் வாசுதேவ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த கொலைக்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை. இதற்கிடையே கனடாவில் உள்ள இந்திய தூதரகம் உயிரிழந்த கார்த்திக் வாசுதேவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கார்த்திக் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |