Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வேலூரில் ராணுவ வீரரின் வீட்டிலேயே திருடர்கள் கைவசம்”… 33 சவரன் நகை கொள்ளை…!!!

வேலூர் மாவட்டத்தில் பட்டப்பகலிலேயே இராணுவ வீரரின் வீட்டின் பூட்டை உடைத்து திருடர்கள் கைவசம்.

ராணுவ வீரரான பூபாலன் என்பவரின் மனைவி ராதிகா வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது துணிகள் பொருட்கள் ஆங்காங்கே கிடந்தது. பின்னர் பீரோவை பார்த்தபொழுது பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த 33 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் அங்கு சோதனையிட்டு அப்பகுதி மக்களிடையே விசாரணை நடத்தினார்கள்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் ராதிகாவின் நடவடிக்கைகளை நன்கு அறிந்தவர்கள் தான் அவரின் செயல்களை நோட்டமிட்டு அவர் இல்லாத நேரம் பார்த்து வீட்டின் பூட்டை உடைத்து திருடியது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் சிம்பா திருட்டு நடந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டு கைரேகை நிபுணர்கள் அங்கிருந்த கைரேகை மாதிரியை சேகரித்தனர்.

பின்னர் சிம்பா வீட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் மோப்பம் பிடித்து அந்த பகுதியில் இருந்து சிறிது தூரம் ஓடி போய் மீண்டும் வந்தது. அது யாரையும் கண்டுபிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் வழக்குப்பதிவு செய்து அங்கு இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றார்கள். பட்டப்பகலில் ராணுவ வீரரின் வீட்டிலேயே 33 சவரன் நகையை திருடியது அப்பகுதி மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |