சேலம் மாவட்டம் மல்லூர் வேங்காம்பட்டி கோவில் திருவிழாவின் இறுதி நாளில் திரையிசை கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது விழாவில் பிரபல தமிழ்சினிமா நடிகை மற்றும் பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா பங்கேற்றார். இந்நிலையில் மேடைக்கு அருகே ஆண்ட்ரியாவை பார்க்க ரசிகர்கள் அடித்து பிடித்து மேலேஏற முயற்சி செய்ததால் காவல்துறையினர் அனைவரையும் விரட்டியடித்தனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சினிமா பாடல்களை நடிகை ஆண்ட்ரியா பாடிய சூழ்நிலையில், நடனம் ஆட வேண்டுமென்று ரசிகர்கள் கூச்சலிட்டதால் அவர் கோபமாகி அமைதியாக நின்றார். அதன்பின் அந்த பகுதியிலிருந்து ஆண்ட்ரியா புறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.