மனைவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கல்சிறுநாகலூர் பகுதியில் உமா பார்வதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் ஏழுமலை என்பவருக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது உமா பார்வதியின் பெற்றோர் மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணையாக 10 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசை கொடுத்துள்ளனர். இந்நிலையில் திருமணமான 3 மாதத்தில் இருந்தே உமா பார்வதியிடம் சிலம்பரசன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார். அப்போது உமா பார்வதி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த வரதட்சணை கொடுமைக்கு சிலம்பரசனின் தாய்-தந்தை உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து உமா பார்வதி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அதன்பிறகு உமா பார்வதியின் தாயார் சிலம்பரசனின் வீட்டிற்கு சென்று செய்ய வேண்டிய சீர்வரிசைகளை வளைகாப்பின் போது செய்வதாக கூறி விட்டு வந்துள்ளார். ஆனால் சிலம்பரசன் தொடர்ந்து உமா பார்வதியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் மனமுடைந்த உமாபாரதி கடந்த 2014-ஆம் ஆண்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து திருநாவலூர் காவல்நிலையத்தில் உமா பார்வதியின் தாயார் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின்படி சிலம்பரசன், கலியம்மாள் ஏழுமலை, முனுசாமி ஆகிய 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்துள்ளது. இதை விசாரித்த நீதிபதிகள் சிலம்பரசனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முனுசாமி, கலியம்மாள், ஏழுமலை ஆகியோரை நீதிமன்றம் விடுவித்தது.