இம்ரான் கான் தலைமையிலான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு இன்று நடைபெற இருக்கிறது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைப்பது செல்லாது என அதிரடியாக உத்தரவு பிறப்பித்த அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட் பிரதமர் இம்ரான்கான் அரசிற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 9ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென தீர்ப்பளித்திருக்கிறது. பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது 3ஆம் தேதி ஓட்டெடுப்பு நடத்தப்படாமல் துணை சபாநாயகர் காசிம் சூரி நிராகரித்துள்ளார். இதனையடுத்து இம்ரான்கான் பரிந்துரையால் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஆரிப் ஆல்வி கலைத்து உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த விவகாரத்தை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் நடவடிக்கை சட்டவிரோதமானது எனவும் அது செல்லாது எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் நாடாளுமன்றத்தை 9ஆம் தேதி கூட்டுவதற்கு அறிவிப்பை வெளியிடுமாறு சபாநாயகர் ஆசாத் காசியருக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள் இன்று காலை 10.30 மணிக்கு இம்ரான்கான் அரசிற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.