Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும். நாளை தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

ஏப்ரல் 11 அன்று தென் தமிழகம், கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா, தெற்கு குமரி, வங்க கடலில் சூறைக்காற்று வீசக் கூடும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |