தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து வார்டு உறுப்பினர், மேயர், துணை மேயர் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து துணைமேயர் காமராஜ் மண்டல தலைவர் இந்திரன் போன்றோர் அதிகாரிகளுடன் வார்டு வாரியாக கடந்த வெள்ளிக்கிழமை ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். தாம்பரம் மாநகராட்சி 46 வது வார்டு உறுப்பினர் ரமணி ஆதிமூலம் 48 வது வார்டு உறுப்பினர் சசிகலா போன்றோர் குடிநீர் பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
திருவள்ளுவர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலையை பார்வை துணை அமைய காமராஜ் தரமான சாலை அமைக்கும் பணி மேற்கொள்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். வார்டு உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.