Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கு…. சம்பள கணக்கீடு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பள கணக்கீடு விவரங்கள் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இதன்மூலம் டி.ஏ மற்றும் டி.ஆர் 34% விகிதத்தில் வழங்கப்படும். இதற்கு முன்பு 31% இருந்தது. இனி வருகிற ஜனவரி 1-ஆம் தேதி முதல் டி.ஏ 3% உயர்த்தப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இந்த டி.ஏ கணக்கீடு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் மட்டும் கணக்கிடப்படும். இதனால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் உயர்த்தப்பட்ட தொகையை பெறுவார்கள்.

இந்நிலையில் ஆயுதப்படை பணியாளர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகம் தனித்தனியான அகவிலைப்படி குறித்த அறிவிப்பை வெளியிடும். இந்த அறிவிப்பு பாதுகாப்பு சேவைகளிலிருந்து ஊதியம் பெறும் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும். மேலும் ஒரு ஊழியருக்கு அடிப்படை சம்பளம் ரூபாய் 18,000 இருந்தால், அவர்களுக்கு ரூபாய் 6,120 அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். இதனைடுத்து டி.ஏ விகிதத்தில் ரூபாய் 540 உயர்த்தப்பட்டுள்ளது.

Categories

Tech |