Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்றி… “மரக்கன்றுகளை நட்ட அதிகாரிகள்”…. நன்றி தெரிவித்த மக்கள்..!

கறம்பக்குடி அருகில் ரெகுநாதபுரம் புது விடுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அதிகாரிகள் மரக்கன்றை  நட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகில் ரெகுநாதபுரம் புது விடுதியில் உள்ள கடை வீதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்சி கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளன மற்றும் கடைகள், கட்டிடங்கள் இருந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விபத்து அடிக்கடி ஏற்படுகின்றது. எனவே இந்த ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நெடுஞ்சாலைதுறை சார்பாக பலமுறை அறிவுறுத்தியும் ஆக்கிரமிப்புகள் அகற்றவில்லை. இதைதொடர்ந்து நேற்று கரம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் நில அளவை துறை ஊழியர்கள் ரெகுநாதபுரம் பொது வீதியில் உள்ள கறம்பகுடி – தஞ்சாவூர் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது சாலை ஓரமாக இருந்த கட்டிடங்கள், சுற்றுசுவர், கொட்டகை, கட்சி கொடி கம்பங்கள் அனைத்தையும் பொக்லைன் எந்திரம் கொண்டு இடித்து அகற்றினார்கள். இதைத்தொடர்ந்து மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் இருக்க அந்த இடங்களில் மரக்கன்றுகளை நட்டு சுற்றி கம்பி வலை கூண்டு அமைத்தனர்.

பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு சாலை அகலப்படுத்துவதை பார்த்து பொதுமக்கள் நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் கலவரம் ஏற்படாமல் இருப்பதற்காக கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |