வேலூர் மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களை கண்டறிவதற்கு ஆரம்பமாக ஹாக்கி போட்டியை தொடங்கி வைத்தார் கலெக்டர்.
வேலூர் மாவட்டத்தில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர்களை வழிநடத்தி அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக ஒவ்வொரு வட்டாரத்திலும் மையம் அமைக்கப்பட்டு தேர்வு செய்து அவர்களுக்கு அடிப்படை வசதிகளை அளித்து பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது.
இதன் ஆரம்பமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு ஆக்கி போட்டியை மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் தொடங்கி வைத்து விளையாட்டிற்கான அடிப்படை உபகரணங்களை வழங்கினார். அங்கு ஆக்கி போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆலிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.