கனடா நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு சிப்பி உணவின் மூலமாக வைரஸ் பரவியதால் அதை சாப்பிடக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதியில் சேகரிக்கப்பட்ட Oysters என்ற சிப்பி உணவில் Oysters என்ற வைரஸ் உள்ளது என்றும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இந்த வைரஸால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது தெரிய வந்திருக்கிறது.
கனடாவில் தயாரிக்கப்பட்ட அந்த சிப்பி உணவானது, அமெரிக்காவின் 13 மாகாணங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. அது உயிருக்கு ஆபத்தை விளைவிக்காது எனினும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
எனவே அந்த சிப்பி உணவுகளை யாரும் உண்ண வேண்டாம் என்று அமெரிக்கா மற்றும் கனடா அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.