இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நாரி கான்ட்ராக்டரின் தலையில் இருந்து 60 வருடங்களுக்குப் பின்னர் உலோக தகடு வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளது. கடந்த 1962-ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட காயத்தால் அவரது தலையில் உலோக தகடு பொருத்தப்பட்டது. அதன்பின் 10 ஆண்டுகள் அவர் கிரிக்கெட் விளையாடினார். தற்போது 60 வருடங்களுக்கு பிறகு மருத்துவரின் பரிந்துரைப்படி அவரது தலையில் வைக்கப்பட்ட தகடு மும்பை மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் நீக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக இருப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
Categories
60 வருடங்களுக்குப் பிறகு…. கிரிக்கெட் வீரர் தலையிலிருந்து நீக்கப்பட்ட உலோகத் தகடு….!!!!
