Categories
தேசிய செய்திகள்

BREAKING: இனி 180 நாட்களுக்குள் பட்டம்…. யுஜிசி புதிய உத்தரவு….!!!!

பட்டப் படிப்பில் மாணவர்கள் படித்து முடித்த 180 நாட்களுக்குள் பட்டங்களை வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்தபிறகு பட்டங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் நலனைக் கருதி இந்த உத்தரவை யுஜிசி பிறப்பித்துள்ளது. மேலும் பட்டங்களை தாமதமாக வழங்குவதால் மாணவர்களின் வேலை வாய்ப்பில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே விரைவாக பட்டங்களை வழங்க அனைத்து பல்கலைக்கழகங்களும் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |