Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஒரு நாளைக்கு 10 பேர் தான் வரனும்… அரசு மருத்துவமனையில்.… மாற்றுத்திறனாளிகள் திடீர் ஆர்ப்பாட்டம்..!!

அரசு ஆஸ்பத்திரியின் முன் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பேருந்தில் பயணிக்க இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் உதவிக்கு செல்லும் பயனாளிகளுக்கும் அரசு பேருந்தில் கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று ரயிலில் பயணம் செய்ய அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவர்கள் அடையாள அட்டை கொடுத்துள்ளனர். இந்நிலையில் அந்த அடையாள அட்டையை வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். அதற்காக அரசு ஆஸ்பத்திரியில் அடையாள அட்டையை புதுப்பிக்க மாற்றுத் திறனாளிகள் பலர் வந்தபோது மருத்துவர்கள் ஒரு நாளைக்கு 10 பேர் மட்டுமே வரவேண்டும் என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஆஸ்பத்திரியின் முன் அமர்ந்து அனைத்து மாற்றுத்திறனாளிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம்  மாற்றுத்திறனாளி மாவட்ட தலைவர்  ரமேஷ்பாபு தலைமையில் நடந்தது. இது குறித்து தகவலறிந்த ஆரணி தாசில்தார் பெருமாள், துணை போலீஸ் சுப்பிரண்டு கோடீஸ்வரன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அனைவருக்கும் சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்டு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அரைமணி நேரம் அந்த மருத்துவமனை பரபரப்பாக இருந்தது.

Categories

Tech |