Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. முழு ஊரடங்கு அமல்?…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. தடுப்பூசி போடும் பணியும் முடுக்கிவிடப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டன. இதுகுறித்த அறிவிப்பை கடந்த மாதம் மத்திய அரசு வெளியிட்டது. அதனால் மக்களும் எவ்வித அச்சமும் இல்லாமல் வெளியில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் 5 மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், கேரளா, மிசோரம், மராட்டியம், டெல்லி மற்றும் அரியானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், கொரோனா வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த வாரத்தில் 2,321 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவில் கடந்த வாரத்தில் பதிவான மொத்த பாதிப்பிலிருந்து 31.8 சதவீதமாகும். அதனைப் போலவே இந்தியாவில் வாராந்திர பாதிப்பு விகிதம் 13.45 சதவீதத்தில் இருந்து 15.53 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது தொடர்ந்து அதிகரித்தால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தலாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |