Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா குறித்து அவதூறு…. இளங்கோவன் மீதான வழக்கு ரத்து….!!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா குறித்து சில கருத்துகளை இழங்கோவன் பதிவு செய்தார். இது குறித்து அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இளங்கோவன் தரப்பில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜகதீஸ் சந்திர முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசவில்லை என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுதாரர் இளங்கோவன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Categories

Tech |