Categories
அரசியல் மாநில செய்திகள்

உட்கட்சி பிரச்சனைகளுக்கு அவசர ஆப்ரேஷன் தேவை – தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலில் ஒரு சில இடங்களில் தொய்வு  ஏற்பட்டதற்கு உன் கட்சி பிரச்சினை இருப்பதாக கூறப்படும் நிலையில் அவசர ஆபரேஷன் தேவை என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கட்சிக்குள் நடக்கும் எதிர்பாராத பிரச்சினைகளை தீர்க்க நிர்வாகிகள் முயற்சிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஒரு சில பிரச்சினைகளை தலைமையால் தான் தீர்க்க வேண்டும் என்றால் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சூசகமாக குறித்துள்ளார்.

அதேநேரம் தனி மனிதனின் விருப்பு வெறுப்பு மற்றும் சுயநலத்தை விட இயக்கத்தின் வெற்றியே  முக்கியம் என்றும், தனிப்பட்ட முறையில் ஒரு சிலர் தவறு செய்தால் அவர்களை காப்பாற்ற முயற்சிக்க கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற புதியவர்களுக்கு கற்றுத்தர வேண்டும் எனவும் அவர்களை அடிமைகளாக நடத்தக்கூடாது எனவும் கழக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |