Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஐஸ்வர்யா பகிர்ந்த வீடியோ… “தனுஷ் கண்டிப்பா இதுக்கு ஒரு மீம் போடுவாரு”…. விளாசும் நெட்டிசன்ஸ்…!!!

ஐஸ்வர்யா பகிர்ந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜனவரி மாதம்பிரிவதாக அறிவித்தனர். பிரிவுக்குப் பின் ஐஸ்வர்யா இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகின்றார். அண்மையில் இவர் இயக்கத்தில் ஆல்பம்பாடல் வெளியாகியிருந்த நிலையில் அடுத்ததாக லாரன்ஸுடன் துர்கா படத்தில் பணியாற்ற உள்ளார்.

இதைத்தொடர்ந்து இரண்டு ஹாலிவூட் திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். பிரிவுக்குப் பின் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டும் வரும் ஐஸ்வர்யா காபி குடிப்பது, ஒர்க்கவுட் செய்வது என தினமும் இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டு வருகின்றார். ஆரம்பத்தில் பகிர்ந்த பதிவுகளுக்கு லைக் போட்டு வந்த நெட்டிசன்கள் பின்னர் விளாச தொடங்கியுள்ளனர். எதற்காக திடீரென இத்தனை வீடியோக்கள் பகிர்ந்து வருகிறீர்கள் என்றும் இந்த வீடியோக்களுக்கு எல்லாம் தனுஷ் ஒரு நாள் “என் மனைவியாக இருந்த போது, என் முன்னால் மனைவியாக இருந்த போது” என வேறுபாடு காட்டி மீம் வீடியோ போடுவார் என நக்கல் செய்து வருகின்றனர்.

Categories

Tech |